Kale Online POS FAQ


Kale Online POS என்னுடைய வியாபாரத்திற்கு பொருத்தமானதா?

இது பல வகையான வியாபாரங்களுக்கு பொருத்தமானது. அத்துடன் உங்களுடைய வியாபாரத்திற்கு ஏற்றாற்போல இதனை மாற்றியமைக்கலாம்.

Hardware ஐ பொறுத்த வரையில் இன்ரனெற் இணைப்புடன் கூடிய ஒரு கணனி இருந்தாலே போதுமானது.


Hardware Support தொடர்பாக சொல்ல முடியுமா?

Kale Online POS ஆனது browser இல் இயங்குவதனால் எந்த Operating system இலும் (Windows, Mac, Linux) இயங்கக்கூடியது.

Kale Online POS ஆனது ஒரு பாவனையாளர் கணக்கினை மாத்திரமே வைத்திருக்கலாம். ஆனால் Kale Online POS Pro வில் 3 பாவனையாளர்களின் கணக்கினை வைத்திருக்கலாம். இலாப அறிக்கை உட்பட அனைத்து விடயங்களையும் Admin பாவனையாளர் மட்டுமே பார்வையிடலாம்.


Kale POS மற்றும் Kale Online POS ஆகிய இரண்டையும் இணைத்து பயன்படுத்த முடியுமா?

எங்களுடைய வாடிக்கையாளர்களில் பலர் Kale Online POS ஐ Kale POS உடன் இணைத்து பயன்படுத்துகிறார்கள். அதனைப் போன்று உங்களுடைய வியாபார தேவைக்கு ஏற்ப இவ் இரண்டினையும் இணைத்துப் பயன்படுத்தலாம்.


Kale Online POS இல் உள்ள தகவல்களை Accounting Application இற்கு அனுப்ப முடியுமா?

விற்பனை, கொள்வனவு உள்ளிட்ட பல தகவல்களை Online POS மூலம் Export செய்து அதனை excel மூலமாக accounting application இற்கு மாற்றலாம். அத்துடன் Quickbook அல்லது Tally account ஐ Kale Online POS உடன் இணைத்து பயன்படுத்தி accounting ஐ இலகுபடுத்தலாம்.


Kale Online POS மூலம் கொள்வனவு செய்முறையினை முகாமை செய்யலாமா?

ஆம் , முடியும். காசு, கடன் கொள்வனவுகளை பதிவிடலாம். கடன் கொள்வனவாயின் விநியோகஸ்தர் விபரம், அவர்களின் கொடுப்பனவு உள்ளிட்ட பல விடயங்களை முகாமை செய்யவும் இதனை பயன்படுத்தலாம்.


Kale Online POS இல் இருப்புக்களை பதிவது எவ்வாறு?

பல வழிகளில் இருப்புக்களை பதியலாம்.

  • முதல் தடவை பதியும் போது excel இல் அனைத்து விபரங்களையும் பதிவிட்ட பின்னர் Kale Online POS இல் அத்தரவுகளை import செய்வதன் மூலம் பதிவிறக்கம் செய்யமுடியும்.
  • ஒவ்வொரு பொருளாக பதிவிடுவதாயின் add item என்ற பகுதியின் மூலம் பதிவிடலாம்.
  • Kale Stock App மூலமாக பதிவிடலாம்.
  • உங்களுடைய இருப்பு மிக அதிகளவாயின் ஒன்றுக்கு மேற்பட்ட mobile phone இல் Kale Stock App ஐ install செய்து இருப்பு எடுப்பதனை விரைவுபடுத்தலாம்.

நான் இரண்டு கடைகள் வைத்திருக்கிறேன். எவ்வாறு இவ் இரண்டு கடைகளையும் இலகுவில் முகாமை செய்யலாம்?

இரண்டு கடைகள் மாத்திரம் அல்ல, வேறு வியாபாரங்களை நீங்கள் நடத்தினாலும் அனைத்தையும் Kale POS, Kale Online POS மற்றும் Mobile POS மூலமாக இலகுவில் முகாமை செய்யலாம்.


எனது வருடாந்த கட்டணத்தை இரத்துசெய்யலாமா?

ஆம், நீங்கள் விரும்பும் நேரத்தில் இரத்துசெய்யமுடியும். அத்துடன் உங்களுடைய வியாபார தகவல்களை backup செய்வதற்கும் போதிய நேர இடைவெளி வழங்கப்படும்.


நீங்கள் எனது வியாபார தகவல்களை backup எடுக்கிறீர்களா?

ஆம், உங்களுடைய வியாபார தகவல்களை பாதுகாப்பினை கருத்தில் கொண்டு அவற்றை backup எடுத்து சேமிக்கிறோம். நீங்களும் உங்கள் வியாபார தகவல்களை backup எடுத்துக்கொள்ளவும் முடியும்.


எவ்வகையான வியாபாரங்களுக்கு Kale Online POS பொருத்தமானது?

பல சரக்கு கடைகள், பாமசிகள், உணவகங்கள், விடுதிகள், புடவைக்கடைகள், Food city போன்ற பெரிய அளவிலான கடைகள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கும் இது பொருத்தமானதாகும்.

ஒவ்வொரு தொழில்துறைக்கு ஏற்ப special features ஐ கொண்டுள்ளது.


ஏற்கனவே நான் வேறு ஒரு கம்பனி POS System வைத்திருக்கிறேன். எவ்வாறு அத் தகவல்களை Kale Online POS இற்கு மாற்றலாம்?

எமது Service team உடன் தொடர்புகொண்டு Excel மூலமாக இதனை இலகுவில் செய்யலாம்.

ஏற்கனவே உங்களிடமுள்ள System எந்த தேவைகளை நிறைவுசெய்யவில்லை என எமது service team உடன் தொடர்புகொள்ளுங்கள்.

அவற்றிற்குரிய தீர்வினை வழங்குவதற்கு அவர்கள் முயற்சிப்பார்கள்.